கடந்த புதன்கிழமை (18.02.2026) சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பேராசிரியர் வ. அய். சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா சிறப்பு கருத்தரங்கம் மற்றும் படத்திறப்பு விழாவில்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு மு.பெ. சாமிநாதன் அவர்கள் நூற்றாண்டு நாயகரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்தார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,
உலகத் தமிழராய்ச்சி நிறுவனத் தலைவர் திரு. ரெ.பாலகிருஷ்ணன், இ.ஆ.ப.,(ஓய்வு),
உலகத் தமிழராய்ச்சி நிறுவன இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு. கோபிநாத் ஸ்டாலின் உட்பட
தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரைக் குறித்து சில நிமிடங்கள் நினைவுரையாற்றினேன்