Single Post
இன்று (29.05.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டுக் கூட்டரங்கில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “அறிஞர்கள் அவையம்” நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. (ஓய்வு), தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (கூ.பொ.) திரு. கோபிநாத் ஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Are You Looking for
Experienced Attorneys?
Get a free initial consultation right now






